/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
8 அமைப்புகள் மீது 16 வழக்குகள் பதிவு
/
8 அமைப்புகள் மீது 16 வழக்குகள் பதிவு
ADDED : ஆக 06, 2025 12:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, தீரன் சின்னமலை நினைவு தின நிகழ்ச்சி கடந்த, 3ல் அறச்சலுாரை அடுத்த ஓடாநிலையில் நடந்தது. ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி நாமக்கல், சேலம், திருப்பூர் மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு அரசியல் கட்சி, அமைப்பினர், மாலை அணிவித்து மரியாதை செலுத்த வந்து சென்றனர்.
இதில் போக்குவரத்து விதிமீறல், பொது இடத்தில் போக்குவரத்து, மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டது தொடர்பாக, எட்டு அமைப்புகளை சேர்ந்தவர்கள் மீது, அறச்சலுார், சிவகிரி, ஈரோடு டவுன் போலீசார், 16 வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.