/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு மாவட்டத்தில் 16 தாசில்தார் துணை தாசில்தார்கள் இடமாற்றம்
/
ஈரோடு மாவட்டத்தில் 16 தாசில்தார் துணை தாசில்தார்கள் இடமாற்றம்
ஈரோடு மாவட்டத்தில் 16 தாசில்தார் துணை தாசில்தார்கள் இடமாற்றம்
ஈரோடு மாவட்டத்தில் 16 தாசில்தார் துணை தாசில்தார்கள் இடமாற்றம்
ADDED : மார் 01, 2026 08:20 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் தேர்தலுக்காக, 16 தாசில்தார்கள், துணை தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
நம்பியூர் தாசில்தார் வெங்கடேஸ்வரன் - பவானி தாசில்தாராகவும், பவானி தாசில்தார் ஆர்.சரவணன் - பெருந்துறைக்கும், பெருந்துறை தாசில்தார் ஜெகநாதன் - நம்பியூருக்கும், ஈரோடு கலெக்டர் அலுவலக மேலாளர் (குற்றவியல்) விஜயகுமார் - கலெக்டர் அலுவலக மேலாளர் (பொது), இப்பணியில் இருந்த பாலசுப்பிரமணியம் - கலெக்டர் அலுவலக மேலாளர் (குற்றவியல்), கோபி கோட்ட கலால் அலுவலர் ஆசியா - கோபி தனி தாசில்தார் (முத்திரைகள்), இப்பணியில் இருந்த சந்திரசேகர் - ஈரோடு ஆதிதிராவிடர் நல தனி தாசில்தாராகவும், இப்பணி செய்த கணேசன் - அந்தியூர் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும், அப்பதவியில் இருந்த சண்முகசுந்தரம் - ஈரோடு கலெக்டர் அலுவலக தேர்தல் பிரிவு தனி தாசில்தாராகவும், மொடக்குறிச்சி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் முத்துலட்சுமி - கலெக்டர் அலுவலக தனி தாசில்தாராகவும், அப்பணியில் இருந்த அங்க முத்து - மொடக்குறிச்சி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
கோபி தாலுகா அலுவலக மண்டல துணை தாசில்தார்-2 கு.செந்தில்குமார் - கோபி தாலுகா தேர்தல் துணை தாசில்தாராகவும், அப்பணியில் இருந்த வி.விஜயலட்சுமி - கோபி மண்டல துணை தாசில்தார் - 2க்கும், ஈரோடு தாலுகா அலுவலக மண்டல துணை தாசில்தார் விஜயகுமார் - ஈரோடு தாலுகா அலுவலக தேர்தல் துணை தாசில்தாராகவும், ஈரோடு கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளர் 'கே' பிரிவு சங்கமித்திரை - ஈரோடு கலெக்டர் அலுவலக சமூக பாதுகாப்பு திட்ட தலைமை உதவியாளராகவும், இப்பணியில் இருந்த என்.செல்வகுமார் - ஈரோடு கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளர் 'கே' பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.பணியிட மாற்றம் செய்யப்பட்டவர்கள், உடன் புதிய பணியிடத்தில் சேர்ந்து கொள்ள வேண்டும். பணியில் சேராத நாட்கள், ஊதியமில்லா விடுப்பாக கணக்கிடப்படும் என, கலெக்டர் கந்தசாமி உத்தரவில் தெரிவித்துள்ளார்.

