/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சதுர்த்திக்கு 1,600 சிலைகள் பிரதிஷ்டை
/
சதுர்த்திக்கு 1,600 சிலைகள் பிரதிஷ்டை
ADDED : ஆக 18, 2025 03:15 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் இந்தாண்டு, 1,600 விநாயகர் சிலைகள் வைக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
விநாயகர் சதுர்த்தி வரும் 27ல் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் சதுர்த்தி விழா கொண்டாட்டத்தை சட்டம்-ஒழுங்கு பிரச்னையின்றி அமைதியாக நடத்துவது குறித்து, போலீசார் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
கடந்தாண்டை போலவே இந்தாண்டும் மாவட்டத்தில், 1,600 விநாயகர் சிலைகள் வைத்து வழிபட அனுமதிக்கப்படும். 10 அடி உயரத்துக்கு மேல் சிலை இருக்க கூடாது. சிலைகளை வைக்க ஏற்பாடு செய்பவர்களே பாதுகாத்து கொள்ள வேண்டும். புதிதாக விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்படாது. பொது இடத்தில் சிலை வைக்க ஆர்.டி.ஓ., அனுமதி பெற வேண்டும். விநாயகர் சிலைகளை வைத்த பிறகே சரியான எண்ணிக்கை தெரியவரும். இவ்வாறு கூறினர்.