sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ரூ.17 கோடிக்கு நாட்டு சர்க்கரைபழனி தேவஸ்தானம் கொள்முதல்

ரூ.17 கோடிக்கு நாட்டு சர்க்கரைபழனி தேவஸ்தானம் கொள்முதல்

ரூ.17 கோடிக்கு நாட்டு சர்க்கரைபழனி தேவஸ்தானம் கொள்முதல்


ADDED : ஏப் 03, 2025 01:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 03, 2025 01:30 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ரூ.17 கோடிக்கு நாட்டு சர்க்கரைபழனி தேவஸ்தானம் கொள்முதல்

கோபி:ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை, நாட்டு சர்க்கரை, உருண்டை வெல்லத்துக்கான ஏலம் நடக்கிறது. கோபி, பவானி தாலுகாவை சேர்ந்த கரும்பு விவசாயிகள், தாங்கள் உற்பத்தி செய்த நாட்டு சர்க்கரையை, ஏலத்துக்கு கொண்டு வருகின்றனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, 2020 அக்.,15 முதல், கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், முதல் தரம் (திடம்) மற்றும் இரண்டாம் தரம் (மீடியம்) என நாட்டு சர்க்கரை மற்றும் உருண்டை வெல்லத்தை, பழனி தேவஸ்தான நிர்வாகம் கொள்முதல் செய்கின்றனர்.

கடந்த, 2024 ஏப்.,1 முதல், நடப்பாண்டின் மார்ச்., 31 வரை கடந்த ஓராண்டில், 1,540 விவசாயிகளிடம் இருந்து, 17.01 கோடி ரூபாய் மதிப்பில், 63 ஆயிரத்து, 952 மூட்டைகளில் (60 கிலோ), மொத்தம், 38 ஆயிரத்து, 371 குவிண்டால் எடையில், நாட்டு சர்க்கரையை பழனி தேவஸ்தான நிர்வாகம் கொள்முதல் செய்துள்ளனர். உருண்டை வெல்லம் கொள்முதலில், 26.23 லட்சம் ரூபாய் மதிப்பில், 43 விவசாயிகளிடம் இருந்து, 1,635 சிப்பத்தில் (30 கிலோ), 490 குவிண்டால் கொள்முதல் செய்துள்ளனர்.

கடந்த ஓராண்டில் மட்டும், 17.27 கோடி ரூபாய் மதிப்பில், 38 ஆயிரத்து, 861 குவிண்டால் கொள்முதல் செய்துள்ளதாக, அதன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us