/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆக்கிரமிப்பில் இருந்த 17 வீடுகள் அகற்றம்
/
ஆக்கிரமிப்பில் இருந்த 17 வீடுகள் அகற்றம்
ADDED : டிச 05, 2024 07:25 AM
ஈரோடு: ஈரோடு பெரும்பள்ளம் ஓடை ஆக்கிரமிப்பில் இருந்த, 17 வீடுகளை அகற்றும் பணி நடந்து வருகிறது.
ஈரோடு, பெரும்பள்ளம் ஓடை விரிவாக்கப் பணி நடந்து வருகி-றது. மாநகராட்சிக்கு உட்பட்ட ஸ்டோனி பிரிட்ஜ் அருகே, பெரும்பள்ளம் ஓடை ஓரத்தில் உள்ள, 17 வீடுகள் நீர்நில புறம்-போக்கில் இருப்பதாக அடையாளம் காணப்பட்டன. இதைய-டுத்து, அவற்றை அப்புறப்படுத்திக்கொள்ள, அங்கு வசித்து வந்த-வர்களிடம்,
ஓராண்டுக்கு முன்னர் நோட்டீஸ் வழங்கி அறிவிக்கப்-பட்டது. மேலும் அங்கு வசித்தவர்களுக்கு நகர்ப்புற
வாழ்விட மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், சித்தோடு அருகே உள்ள நல்லக-வுண்டம்பாளையத்தில் அடுக்குமாடி
குடியிருப்பில் வீடுகளும் ஒதுக்கப்பட்டன.அதன் அடிப்படையில், குடியிருப்புவாசிகள் சிலர் வீடுகளை காலி செய்து விட்ட பின்னரும், தங்களது
வீடுகளில் தேவையற்ற பொருள்களை போட்டு வைத்திருந்தனர். இந்நிலையில் மாநக-ராட்சி சார்பில், 17
வீடுகளை இடித்து அகற்றும் பணி நேற்று மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, வீடுகளில் இருந்த பொருள்களை
உடமைதாரர்கள் அகற்றிக் கொண்டனர்.ஆக்கிரமிப்-புகளை முழுமையாக அகற்றிய பின், பெரும்பள்ளம்
ஓடையில் தடுப்புச்சுவர் கட்டும் பணி தொடங்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.