தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/வரைவு வாக்காளர் பட்டியலில் 17.69 லட்சம் பேர்

வரைவு வாக்காளர் பட்டியலில் 17.69 லட்சம் பேர்

வரைவு வாக்காளர் பட்டியலில் 17.69 லட்சம் பேர்


ADDED : நவ 13, 2026 06:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 13, 2026 06:05 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டசபை தொகுதிக்கான, வரைவு வாக்களர் பட்டியலை, டி.ஆர்.ஓ., ஜெயராமன் நேற்று வெளியிட, அரசியல் கட்சி பிரதிநிதிகள் பெற்று கொண்டனர்.

கடந்த சட்டசபை தேர்தலின்போது ஏப்.,5ன்படி, மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் - 8,47,167, பெண் வாக்காளர்கள் - 9,11,802, மூன்றாம் பாலினம் - 188 பேர் என, 17 லட்சத்து, 59,157 பேர் இருந்தனர். அதன் பின் எஸ்.ஐ.ஆரில் டுபட்டவர்கள், புதிய வாக்காளர்களாக சேர்ந்தவர்கள் சேர்த்து, 17 லட்சத்து, 69,770 வாக்காளர்கள் உள்ளனர். முன்பு, 2,379 ஓட்டுச்சாவடிகளாக இருந்து, 1,200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள ஓட்டுச்சாவடிகள் பிரிக்கப்பட்டு தற்போது, 2,375 ஓட்டுச்சாவடியாக குறைந்துள்ளது.

வரும், 2027 ஜன., 1 ஐ தகுதி நாளாக கொண்டு, 18 வயது பூர்த்தி அடையும் புதியவர்கள் வாக்காளராக சேரவும், பிற வாக்காளர்கள் திருத்தங்கள், நீக்கம் மேற்கொள்ளலாம். அந்தந்த பகுதி தாலுகா அலுவலகம், ஆர்.டி.ஓ., அலுவலகம், கலெக்டர் அலுவலகம், ஆன்லைனில், voters.eci.gov.in ல் விண்ணப்பித்தும் சேரலாம். இதற்காக வரும், 21, 22, 29, டிச., 5 ஆகிய நான்கு நாட்கள் சிறப்பு முகாம், அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் காலை, 9:30 முதல் மாலை, 5:00 மணி வரை நடக்க உள்ளது. புதிய இறுதி வாக்காளர் பட்டியல் தயாரித்து வரும் ஜன., 4ல் வெளியிடப்படும். எஸ்.ஐ.ஆரில் விடுபட்டவர்கள், திருத்தம் மேற்கொண்டவர்கள் விண்ணப்பம் பெறப்பட்டுள்ளன. அவற்றுக்கும், புதிதாக பெறப்படும் விண்ணப்பங்களுக்கும் டிச., 28 க்குள் பரிசீலனை செய்து தீர்வு காணப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்வில் காங்., கட்சி சார்பில் விஜயபாஸ்கர், அ.தி.மு.க., சோழாலோகநாதன், தி.மு.க., சந்திரசேகர், த.வெ.க., வீரா செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us