ADDED : ஜன 24, 2026 05:45 AM
அ நிறம் | அளவு
ஈரோடு; ஈரோடு டவுன் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார், ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் இரண்டாவது நடைமேடை பகுதியில், நேற்று முன்தினம் கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டனர்.
அங்குள்ள பொது கழிப்பிடம் அருகே ஒரு பை கிடந்தது. சோதனை செய்ததில், ஒரு கிலோ எடையில், 178 கஞ்சா சாக்லேட் இருந்தது. இதை வீசி சென்றது யார்? என்று, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
