/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சாலை விபத்து நிவாரண நிதிக்காக 188 பேரிடம் விசாரணை
/
சாலை விபத்து நிவாரண நிதிக்காக 188 பேரிடம் விசாரணை
ADDED : டிச 24, 2025 08:48 AM
கோபி: சாலை விபத்தில், காயமடைந்தவருக்கு, 10 ஆயிரம் ரூபாய், பலத்த காயத்துக்கு, 25 ஆயிரம் ரூபாய், கொடுங்காயத்துக்கு, 50 ஆயிரம், உயிரிழப்புக்கு ஒரு லட்சம் ரூபாய் என, அரசு தரப்பில் விபத்து நிவாரண நிதியாக வழங்கப்படுகிறது.
விபத்தில் சிக்கியவர்கள், தங்களின் வழக்கு விபரங்களுடன், விண்ணப்பிப்போருக்கு, அந்தந்த சப்-டிவிஷன் டி.எஸ்.பி., வழங்கும் அறிக்கை அடிப்படையில் நிதி வழங்கப்படுகிறது. கோபி கோட்ட பகுதியில், சாலை விபத்து நிவாரண நிதிக்காக, 346 பேருக்கு விபத்து நிவாரண நிதி வழங்க, 2.45 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி கோபி தாலுகாவில், 88, பவானி தாலுகாவில், 100 பேர் என, 188 பேர் விபத்து நிவாரண நிதிக்கு விண்ணப்பித்திருந்தனர். இவர்களிடம் வழக்கு விபரங்கள் மற்றும் ஆவணங்களின் விபரங்களை, கோபி சப்-கலெக்டர் சிவானந்தம் தலைமையில், அவரது அலுவலகத்தில் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்து விசாரித்தனர். இதற்காக அந்தந்த பகுதி வி.ஏ.ஓ.,க்களும் வந்திருந்தனர்.

