ADDED : ஏப் 16, 2025 01:09 AM
19, 20ல் ஓவிய கண்காட்சி
ஈரோடு:உலக ஓவிய தினத்தை ஒட்டி, கலை பண்பாட்டு துறையின் ஜவகர் சிறுவர் மன்றங்களில் ஓவிய கலையை ஊக்குவிக்க ஓவிய பயிற்சி பட்டறை, ஓவிய கலை கண்காட்சி முகாம், கோபி டயமண்ட் ஜூபிளி பிரைமரி உதவி பெறும் பள்ளியில் வரும், 19ல், பவானி சாலை, பி.பெ.அக்ரஹாரம் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் வரும், 20ம் தேதி காலை, 10:00 முதல் மாலை, 4:00 மணி வரை ஓவிய பயிற்சி முகாம் நடக்க உள்ளது.
மரபு சார்ந்த ஓவியங்கள், துணி ஓவியங்கள், கண்ணாடி, பேப்பர், பானை, மரம், வாட்டர் கலர், உலர் மெழுகு, உலரா மெழுகு, பென்சில்
ஓவியங்கள் உட்பட அனைத்து வகை ஓவியங்களும் இடம் பெறும். ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த, 5 முதல், 16 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் பங்கேற்கலாம். கூடுதல் விபரத்துக்கு, ஜவகர் சிறுவர் மன்ற திட்ட அலுவலரை 99946 61754 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அறியலாம்.