/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தேர்தல் நடத்தை விதியால் 19 இன்ஸ்., இடமாற்றம்
/
தேர்தல் நடத்தை விதியால் 19 இன்ஸ்., இடமாற்றம்
ADDED : ஜன 01, 2024 11:22 AM
ஈரோடு: லோக்சபா தேர்தல் நடத்தை விதிமுறையால், ஒரே மாவட்டத்தில் நீண்ட காலமாக பணியாற்றி வரும் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
இதன்படி ஈரோடு மாவட்டத்தில், 19 பேர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஈரோடு தாலுகா சோமசுந்தரம் காங்கேயம்; திருப்பூர் மாவட்ட நக்சல் தடுப்பு பிரிவு ரவி பங்களாபுதுார்; திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் சித்ரா தேவி ஈரோடு சைபர் கிரைம்; மலையம்பாளையம் ஜீவானந்தம் உடுமலை; காங்கேயம் காமராஜ் வீரப்பன்சத்திரம்; திருப்பூர் மாவட்டம் தளி ராஜேஷ் கண்ணன் அறச்சலுார்; ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு கோமதி காங்கேயம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கும், அங்கிருந்த விஜயலட்சுமி கவுந்தப்பாடிக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மதுவிலக்கு அனுராதா மொடக்குறிச்சி; திருப்பூர் மாவட்ட குற்றப்பதிவேடுகள் பிரிவு ஹேமலதா, சத்தி அனைத்து மகளிர் ஸ்டேஷன்; பல்லடம் சரஸ்வதி ஈரோடு மதுவிலக்கு அமலாக்க பிரிவுக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஈரோடு கருங்கல்பாளையம் ஸ்டேஷனுக்கு விஜயன், சித்தோடுக்கு சிவக்குமார், ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு ராஜநளாயினி இன்ஸ்பெக்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ஈரோடு மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இதேபோல் பங்களாபுதுார் வடிவேல்குமார், சைபர் கிரைம் ஜெயசுதா, வீரப்பன்சத்திரம் இன்ஸ்பெக்டர் சண்முகம், அறச்சலுார் ஜெயமுருகனுக்கு புதிதாக ஸ்டேஷன் ஒதுக்கப்படவில்லை.