தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ஜவுளி வணிக வளாகத்தில் 19 கடைகளுக்கு சீல்

ஜவுளி வணிக வளாகத்தில் 19 கடைகளுக்கு சீல்

ஜவுளி வணிக வளாகத்தில் 19 கடைகளுக்கு சீல்


ADDED : ஜூன் 13, 2026 03:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 13, 2026 03:54 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு ப.செ.பார்க் அருகில் அப்துல் கனி ஜவுளி வளாகம், மாநகராட்சி கட்டுப்பாட்டில் செயல்படுகிறது.

இங்குள்ள பல கடை உரிமையாளர்கள், முறையாக வாடகை செலுத்தாமல் இழுத்தடித்தனர். இதனால் பாக்கி வைத்துள்ள கடைகளை சீல் வைக்க, மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து மாநகராட்சி வருவாய் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான அலுவலர்கள், வாடகை பாக்கி வைத்த, 19 கடைகளை நேற்று பூட்டி சீல் வைத்தனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:- இந்த, 19 கடை உரிமையாளர்களும், மூன்று மாதமாக வாடகை பாக்கி வைத்துள்ளனர். இதன் தொகை, 60 லட்சம் ரூபாயாகும். தற்போது, 20 லட்சம் ரூபாய் செலுத்தியுள்ளனர். மீதி பணம் செலுத்திய பிறகே கடை நடத்த அனுமதி வழங்கப்படும். இவ்வாறு கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us