ADDED : ஜூலை 22, 2025 02:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு மாவட்ட குடிமை பொருள் வளங்கள் குற்ற புலனாய்வு துறை இன்ஸ்பெக்டர் ராஜகுமார் தலைமையிலான போலீசார், பறக்கும் படை தாசில்தார் ஜெயகுமார் ஆகியோர், பங்களாபுதுார் அருகே துாக்க நாயக்கன்பாளையம் பிரிவு பகுதியில், வாகன தணிக்கையில் நேற்று காலை ஈடுபட்டனர். அப்போது வந்த மாருதி ஆம்னி வேனில், 50 கிலோ எடையில், 38 மூட்டை
களில், 1,900 கிலோ ரேஷன் கடத்தி செல்லப்படுவது தெரியவந்தது. வேன் டிரைவரான துாக்கநாயக்கன் பாளையம் கோவிந்தராஜ், 40, என தெரிந்தது. இவர் குறைந்த விலைக்கு மக்களிடம் வாங்கி, சத்தி பகுதியில் வசிக்கும் வட மாநிலத்தவருக்கு அதிக விலைக்கு விற்க எடுத்து சென்றது தெரியவந்தது. வேனுடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். கோவிந்தராஜை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.