ADDED : ஜூன் 04, 2026 04:53 AM
ஈரோடு:ஈரோடு மாவட்ட அரசு பள்ளிகளில் இந்தாண்டு, 19,485 மாணவ, மாணவியர் புதிதாக சேர்ந்து இருப்பதாக பள்ளி கல்வி துறையினர் தெரிவித்துள்ளனர்.
பள்ளிகள்
இன்று திறக்கப்படுகின்றன. 1 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ,
மாணவியருக்கு புத்தகம், நோட்டு, சீருடை, காலனி உள்ளிட்ட கல்வி
உபகரண பொருட்கள் வழங்கப்படுகின்றன. இந்தாண்டு, 19,485 மாணவ,
மாணவியர் அரசு பள்ளிகளில் 1 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளில்
சேர்ந்து இருப்பதாக பள்ளி கல்வி துறையினர் தெரிவித்தனர்.
மேலும்
அவர்கள் கூறியதாவது: அரசு பள்ளிகளில் 1ம் வகுப்பு தமிழ் வழி, 2,377,
ஆங்கில வழி, 1,250. இரண்டாம் வகுப்பு தமிழ் வழி, 66, ஆங்கில வழி, 24.
மூன்றாம் வகுப்பு தமிழ் வழி, 71, ஆங்கில வழி, 32. நான்காம் வகுப்பு தமிழ்
வழி, 47, ஆங்கில வழி, 35 பேர் மற்றும் ஐந்தாம் வகுப்பு தமிழ் வழி, 39,
ஆங்கில வழி, 14. ஆறாம் வகுப்பு தமிழ் வழி, 1,739, ஆங்கில வழி, 1,187,
ஏழாம் வகுப்பு தமிழ் வழி 123, ஆங்கில வழி 164. எட்டாம் வகுப்பு தமிழ் வழி,
136, ஆங்கில வழி, 140. ஒன்பதாம் வகுப்பு தமிழ் வழி, 1,474, ஆங்கில வழி,
684. பத்தாம் வகுப்பு தமிழ் வழி, 85, ஆங்கில வழி, 30. பிளஸ் 1 தமிழ் வழி
5,679, ஆங்கில வழி, 4,048. பிளஸ் 2 தமிழ் வழி, 16, ஆங்கில வழி, 25. தமிழ்
வழியில் பயில, 11,852, ஆங்கில வழியில் பயில, 7,633 மாணவ, மாணவியர் அரசு
பள்ளியில் புதிதாக சேர்ந்துள்ளனர்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
