/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
புதுமை பெண் திட்டத்தில் 1,972 மாணவியர் பயன்
/
புதுமை பெண் திட்டத்தில் 1,972 மாணவியர் பயன்
ADDED : டிச 31, 2024 06:59 AM
ஈரோடு: மூவலுார் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதி திட்டத்தில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆறு முதல் பிளஸ் 2 வரை தமிழில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கும், ௧,௦௦௦ ரூபாய் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று துவங்கி வைத்தார்.
ஈரோட்டில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, புதுமை பெண் திட்ட மாணவிகளுக்கு வங்கி பற்று அட்டையை வழங்கினார்.நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது: ஈரோடு மாவட்டத்தில் புதுமை பெண் திட்டத்தில், 15,739 மாணவிகளும், தமிழ் புதல்வன் திட்டத்தில், 13,837 மாணவர்களும் பயன் பெற்று வருகின்றனர். இத்திட்டம் அரசு பள்ளிக்கு மட்டுமின்றி அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. 79 கல்லுாரிகளில் பயிலும் 1,972 மாணவிகள் இத்திட்டம் மூலம் பயன் பெறுகின்றனர். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், மாவட்ட சமூக நல அலுவலர் சண்முகவடிவு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.