/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காமதேனு கலை கல்லுாரியில் 19-வது பட்டமளிப்பு விழா
/
காமதேனு கலை கல்லுாரியில் 19-வது பட்டமளிப்பு விழா
ADDED : டிச 15, 2024 01:14 AM
ஈரோடு, டிச. ௧௫-
சத்தியமங்கலம் காமதேனு கலை அறிவியல் கல்லுாரியின், 19-வது பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லுாரி தலைவர் பெருமாள்சாமி தலைமை வகித்தார். செயலாளர் அருந்ததி, இணை செயலாளர் மலர்செல்வி, முதன்மையர் நிர்மலா முன்னிலை வகித்தனர். முதல்வர் குருமூர்த்தி வரவேற்றார்.
கோவை மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குனர் கலைச்செல்வி, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவ--மாணவியருக்கு பட்டம் வழங்கி பேசினார்.
அவர் பேசுகையில், தமிழக அரசின் தமிழ் புதல்வன், நான் முதல்வன், புதுமை பெண் திட்டத்தை சரியாக பயன்படுத்தி, வாழ்விலும் தேர்விலும் முன்னேற வேண்டும் என்றார்.
பல்கலை தேர்வில் தங்க பதக்கம் வென்ற மூன்று பேருக்கும், ரேங்க் பட்டியலில் இடம் பெற்ற, 10 பேருக்கும், 728 இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்
களுக்கு பட்டம் வழங்கப்பட்டது. விழாவில் பேராசிரியர், மாணவ--மாணவியர், பெற்றோர் கலந்து கொண்டனர்.