ADDED : மே 16, 2026 05:26 AM
அ நிறம் | அளவு
பவானிசாகர்:பவானிசாகரை அடுத்த புதுப்பீர்கடவை சேர்ந்தவர் மாரப்பன், 37, கட்டட தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் முருகேசன், 37, திருப்பூர் மாவட்டம் திருமுருகன் பூண்டியை சேர்ந்தவர் சதீஷ்குமார், 30; மூவரும் மது அருந்தியபோது முருகேசன் மனைவி குறித்து மாரப்பன் தவறாக பேசியுள்ளார்.
இதனால் மூவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில், முருகேசன் மற்றும் சதீஷ்குமார் சேர்ந்து, பீர் பாட்டிலால் மாரப்பன் தலையில் தாக்கியுள்ளனர். பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்தவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
புகாரின்படி விசாரித்த பவானிசாகர் போலீசார், இருவரையும் நேற்று கைது செய்தனர். சத்தி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சத்தி கிளை சிறையில்
அடைத்தனர்.
