ADDED : டிச 17, 2025 07:21 AM

அ நிறம் | அளவு
பவானி: சித்தோடு போலீசார் தங்களுக்கு கிடைத்த தகவலின்படி, பவானி அடுத்த காளிங்கராயன்பாளையத்தில் உள்ள ஒரு குடோனில், சோதனை நடத்தினர்.
அங்கிருந்த இருவரிடம் விசாரிக்கையில், பவானி, சொக்காரம்மன் நகர் வில்சன், 67; காலிங்கராயன்பாளையம் சபிக்பாபு, 39, என்-பது தெரிந்தது. குடோனை வாடகைக்கு எடுத்து, குட்கா பொருட்-களை பதுக்கி விற்பது தெரிய வந்தது.
அங்கு, 50 குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய இரு கார்களையும் பறிமுதல் செய்தனர்.
