/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரயிலில் கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது
/
ரயிலில் கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது
ADDED : ஆக 06, 2025 12:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில், மது விலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகாமி ராணி தலைமையிலான போலீசார், ரயில்வே பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது இரு சாக்கு மூட்டைகளுடன் நின்று கொண்டிருந்த இருவர், போலீசாரை பார்த்ததும் நகர்ந்து சென்றனர்.
அவர்களை பிடித்து சாக்குப்பைகளை பிரித்து பார்த்தனர். அதில் கஞ்சா இருந்தது. விசாரணையில் கேரள மாநிலம் மலப்புரம் நிஜாமுதின், 34, நசிப், 32, என தெரியவந்தது. சென்னை-மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்தி வந்தது தெரியவந்தது. இருவரையும் கைது செய்து, ௪.௫ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.