UPDATED : ஏப் 27, 2026 06:30 AM
ADDED : ஏப் 27, 2026 03:59 AM

அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு ஆணைக்கல்பாளையம் பூந்துறை சாலையில், மளிகை கடை வைத்திருப்பவர் ஈஸ்வரமூர்த்தி, 47, பா.ஜ., முன்னாள் நிர்வாகி. கடந்த, 9ம் தேதி இரவு கடைக்குள் புகுந்த இருவர், 15 ஆயிரம் ரூபாயை திருடி சென்றனர்.
![]() |
புகாரின்படி தாலுகா போலீசார் ஆசாமிகளை தேடி வந்தனர்.இந்நிலையில்
கடையில் திருடிய சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் அ.சமுத்திரம் பகுதி
ராஜா, 30; திருச்சி மாவட்டம் தாத்தையங்கார்பேட்டை தமிழ்செல்வன், 26,
ஆகியோரை கைதுசெய்தனர்.இதில் ராஜா மீது பள்ளிபாளையம், தர்மபுரி போலீஸ் ஸ்டேஷன்களில் திருட்டு வழக்கு உள்ளது.

