/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரயிலில் மொபைல் திருடிய 2 பேர் கைது
/
ரயிலில் மொபைல் திருடிய 2 பேர் கைது
ADDED : ஆக 19, 2025 02:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஒடிசா மாநிலத்தை சேர்ந்த, 35 வயது ஆண், சந்திரகாஜி- - மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்றார். ரயில் ஈரோடு அருகில் வந்தபோது, அவரிடம் இருந்த மொபைல்போனை மர்மநபர்கள் திருடி தப்பினர். புகாரின்படி ஈரோடு ரயில்வே போலீசார் விசாரித்தனர்.
இது தொடர்பாக கேரளா மாநிலம் பாலக்காடு பெரோஷ், 42; கோழிக்கோடு சாஜி, 46, ஆகியோரை கைது செய்து, மொபைல்போனை மீட்டனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மாவட்ட சிறையில் அடைத்தனர்