ADDED : ஏப் 14, 2026 05:29 AM
அ நிறம் | அளவு
புன்செய்புளியம்பட்டி, புன்செய் புளியம்பட்டியில் நம்பியூர் சாலையில், புன்செய்புளியம்பட்டி போலீசார் நேற்றிரவு ரோந்தில் ஈடுபட்டிருந்தனர். ஒரு தனியார் பள்ளி பின்புறம் இருசக்கர வாகனத்தில் சந்தேகப்படும்படியாக இருவர் நின்று கொண்டிருந்தனர்.
அவர்களை பிடித்து விசாரித்தபோது புன்செய் புளியம்பட்டி மாதம்பாளையம் சாலையை சேர்ந்த சந்தோஷ், 19; குரும்பபாளையம் கோகுல், 19, என தெரிந்தது. இருவரும் இருசக்கர வாகனத்தில் மறைத்து கஞ்சா விற்பனை செய்தம் தெரியவந்தது. வாகனத்தில் மறைத்து வைத்திருந்த, ஒன்றரை கிலோ கஞ்சா, 30 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். இருவரையும் கைது செய்து, பைக்கையும் பறிமுதல் செய்தனர்.
