/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காங்கேயம், வெள்ளகோவில் கொலை வழக்கில் 2 பேர் கைது
/
காங்கேயம், வெள்ளகோவில் கொலை வழக்கில் 2 பேர் கைது
ADDED : அக் 28, 2025 01:57 AM
காங்கேயம், வெள்ளகோவில் வரக்காளி பாளையம், காரக்காட்டுதோட்டம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் ஈஸ்வரமூர்த்தி, 42, இவரது தந்தை கிருஷ்ணமூர்த்தி, 67. இருவரும் கடந்த, 25ம் தேதி இரவு, 8:00 மணி அளவில் இரு சக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து, வெள்ளகோவில் செல்ல, வரக்காளி
பாளையம் பிரிவு அருகே சென்று கொண்டிருந்தனர்.
அப்போது ஈஸ்வரமூர்த்தி உறவினரும், அவருடன் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்பவருமான வரக்காலிபாளையம் ராஜ்குமார்,45, டாடா சுமோ வாகனத்தில் வந்து ஈஸ்வரமூர்த்தியின் இருசக்ககர வாகனத்தில் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார். இதில் ஈஸ்வரமூர்த்தியும், கிருஷ்ணமூர்த்தி கீழே விழுந்தனர்.
பின், ராஜ்குமார் இரும்பு ராடு மூலம் ஈஸ்வரமூர்த்தியை தாக்கியுள்ளார். டாடா சுமோ வாகனத்தை எடுத்து ஈஸ்வரமூர்த்தி மீது ஏற்றியுள்ளார். சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில், ஈஸ்வரமூர்த்தி பலியானார். ராஜ்குமார் தப்பியோடிவிட்டார். வெள்ள
கோவில் போலீசார் வழக்குப்பதிந்து, தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். நேற்று முன்தினம் இரவு வெள்ளகோவில் முத்துார் ரோடு பகுதியில் வாகன சோதனை ஈடுபட்ட போது, அவ்
வழியாக வந்த ராஜ்குமாரை வெள்ளகோவில் போலீசார் கைது செய்தனர்.
*காங்கேயம் அடுத்துள்ள குட்டப்பாளையம், காட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் சிவக்குமார்,50; விவசாயி. இவரது தோட்டத்தில் டிரைவராக வெள்ளகோவிலை சேர்ந்த கவுதம்,30, வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் மாலை, போதையில் இருந்து கவுதமுக்கும், விவசாயிக்கும் தகராறு நடந்தது. ஆத்திரமடைந்த கவுதம், கட்டையால் சிவக்குமாரை அடித்து கொன்று விட்டு தப்பியோடினார். காங்கேயம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். நேற்று முன்தினம் இரவு கவுதமை போலீசார் கைது செய்தனர்.

