ADDED : ஆக 05, 2026 05:09 AM
அ நிறம் | அளவு
பவானி:பவானி
கூடுதுறை ஐயப்பா சேவா மண்டபம், காவிரி ஆற்று படித்துறையில், கஞ்சா
விற்பனை நடப்பதாக கிடைத்த தகவலின்படி, ஈரோடு மதுவிலக்கு போலீசார்
நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சந்தேகப்படும்படி
நடமாடிய சித்தோடு கிருஷ்ணமூர்த்தி, 26; காஞ்சிகோவில்
பெத்தாம்பாளையம் தர்மராஜ், 38, ஆகியோரிடம் சோதனை செய்ததில், 4.50
கிலோ கஞ்சா இருந்தது. இருவரையும் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல்
செய்தனர்.
