ADDED : டிச 26, 2025 05:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை: சென்னிமலை - அரச்சலூர் ரோடு, தண்ணீர் பந்தல் பிரிவு அருகே, சென்னிமலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டி-ருந்தனர்
. அப்போது வந்த ஒரு காரை சோதனை செய்ததில், புகை-யிலை பொருட்கள் இருந்தது. விசாரித்ததில் சென்னிமலையில் உள்ள மளிகை கடைகளுக்கு விற்பனை செய்ய கொண்டு செல்வ-தாக தெரிவித்தனர். காரில் வந்த ஈரோடு, மூலப்பாளையம், பாரதி நகர் மூன்றாவது தெரு அப்துல்லா, 48; ஈரோடு, வெங்கிடசாமி வீதி நாகராஜன், 34; ஆகியோரை கைது செய்து, 645 ஹான்ஸ் பாக்கெட், 3,120 பான் மசாலா பாக்கெட் மற்றும் காரை பறி-முதல் செய்தனர்.

