/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
5 மோட்டார் காயில்கள் திருடிய 2 சிறுவர் கைது
/
5 மோட்டார் காயில்கள் திருடிய 2 சிறுவர் கைது
ADDED : நவ 06, 2025 01:55 AM
ஈரோடு, ஈரோட்டில், ஐந்து மோட்டார் காயில்களை திருடிய இரு சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.ஈரோடு நேதாஜி சாலையை சேர்ந்தவர் ரங்கசாமி, 65. காமாட்சி அம்மன் வீதி பின்புறம் எம்.ஆர்.எஸ் சவுண்ட் சர்வீஸ் வைத்துள்ளார். கடந்த இரு தினங்களுக்கு முன், கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள், ஐந்து மோட்டார் காயில்களை திருடி சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.10 ஆயிரம். இதுகுறித்து ரங்கசாமி அளித்த புகார்படி, போலீசார் சிசிடிவி கேமரா பதிவு, மொபைல் போன் டவர் பதிவுகளை ஆதாரமாக கொண்டு தேடினர்.
இதில் நேதாஜி சாலையை சேர்ந்த, 18 வயது சிறுவன், மரப்பாலத்தை சேர்ந்த, 16 வயது சிறுவன் என இருவரும், ஐந்து மோட்டார் காயில்களை திருடி சென்றது உறுதியானது. இருவர் மீதும் வழக்குப்பதிந்த போலீார், நீதிமன்ற உத்தரவுப்படி கோவையில் உள் கூர் நோக்கு இல்லத்துக்கு அனுப்பி வைத்தனர்.

