ADDED : ஏப் 15, 2026 06:45 AM
அ நிறம் | அளவு
ஈரோடு :வெள்ளித்திருப்பூர் ரெட்டிபாளையம் நேரு நகரில் நேற்று முன்தினம் தமிழக வெற்றி கழகத்தினர் வேட்பாளருடன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆரத்தி எடுக்கப்பட்டது. ஆரத்தி தட்டில் ரூ.100 போட்டதாக த.வெ.க.வை சேர்ந்த அடையாளம் தெரியாத நிர்வாகி மீது தேர்தல் பறக்கும் படையினர் அளித்த புகாரின் பேரில், வெள்ளித்திருப்பூர் போலீசார் வழக்குப்பதிந்தனர்.
இதே போல் வெள்ளோட்டில் வாக்காளர்களுக்கு தமிழ் மாநில காங்., சார்பில் 2 ஹெல்மெட்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையினர் அளித்த புகாரின் பேரில், தமிழ் மாநில காங்., கட்சி நிர்வாகி ஆனந்த மூர்த்தி மீது வெள்ளோடு போலீசார் வழக்குப்பதிந்தனர்.
