தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஈரோட்டில் பணம் பட்டுவாடா தி.மு.க.,வினர் 2 பேர் கைது

ஈரோட்டில் பணம் பட்டுவாடா தி.மு.க.,வினர் 2 பேர் கைது

ஈரோட்டில் பணம் பட்டுவாடா தி.மு.க.,வினர் 2 பேர் கைது


ADDED : ஏப் 23, 2026 04:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 23, 2026 04:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு சின்னசேமூர் பகுதியில், வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் பட்டுவாடா செய்வதாக, மாவட்ட தேர்தல் கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது.

ஈரோடு மேற்கு தொகுதி பறக்கும் படை அதிகாரிகள் விரைந்து சென்றனர். அப்போது சின்னசேமூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே நின்றிருந்த இருவரிடம் விசாரணை நடத்தினர்.

அதில், சின்னசேமூர் எல்லபாளையத்தை சேர்ந்த இளையராஜா மகன் மோகன்ராஜ், 22. பெரியசேமூர் எல்லப்பாளையம் மெயின்ரோட்டை சேர்ந்த தினேஷ்வரன், 40, என்பதும், தி.மு.க.,வை சேர்ந்த இவர்கள் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்து வந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து பறக்கும் படை அதிகாரி அறிவழகன் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகன்ராஜ், தினேஷ்வரன் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.62 ஆயிரத்து 500, வாக்காளர் பட்டியல், தி.மு.க. கட்சி நோட்டீசை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us