ADDED : பிப் 23, 2026 06:45 AM
பவானிசாகர்: பவானிசாகர் அருகே, தோட்டத்தில் நாய்களை சிறுத்தை கடித்து கொன்றதால், விவசாயிகள் பீதியடைந்துள்ளனர்.
பவானிசாகர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு சிறுத்தை, பட்டரமங்கலம் கிராமத்துக்குள் நேற்று முன்தினம் இரவு புகுந்தது. விவசாயிகள் மணியன், நடராஜன் தோட்டங்களில் நடமாடிய சிறுத்தையை பார்த்து, இரு நாய்கள் குரைத்தபடி துரத்த முற்பட்டன. அப்போது இரு நாய்களையும் துரத்தி கடித்து கொன்றது. இதனால் அப்பகுதி விவசாயிகள், மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: கடந்த சில தினங்களாக இப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளது. பவானிசாகர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தாலும் உடனடியாக வருவதில்லை. ஆடு, மாடு, நாயை வேட்டையாடி வரும் சிறுத்தையை, வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

