/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மின் கம்பங்கள் முறிந்துவிழுந்து 2 பேர் காயம்
/
மின் கம்பங்கள் முறிந்துவிழுந்து 2 பேர் காயம்
ADDED : மே 03, 2025 01:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம்:சத்தியமங்கலம் அடுத்த செண்பகபுதுார் பகுதியில், நேற்று மதியம் திடீரென வீசிய பலத்த காற்றால் சாலையோரமிருந்த மரம் முறிந்து மின் கம்பத்தின் மீது
விழுந்தது.
அப்போது அந்த வழியாக டூவீலரில் சென்று கொண்டிருந்த, மாரனுார் மேட்டுக்கடையை சேர்ந்த தனசேகர், 24, பண்ணாரி, 65, ஆகியோர் மீது மின் கம்பிகள் விழுந்ததில் காயமடைந்தனர்.
உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. காயமடைந்த இருவரையும் மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.