ADDED : ஏப் 08, 2026 06:22 AM
அ நிறம் | அளவு
ஈரோடு, ஈரோடு பெரியார் நகரை சேர்ந்தவர் அருண்ராஜ், 32; சரக்கு ஆட்டோ வைத்து தொழில் நடத்துகிறார். உறவினர் உயிரிழந்ததால் இறுதிச்சடங்கில் பங்கேற்க, கருங்கல்பாளையம் ஆத்மா மின் மயானத்துக்கு சரக்கு ஆட்டோவில் நேற்று சென்றார். அவருறான் சித்தப்பாவான பெரியார்நகரை சேர்ந்த சுரேஷ், 50, உள்பட இருவர் சென்றனர்.
ஈ.வி.என்.ரோடு மின்வாரிய அலுவலகம் முன் சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடி, சாலையின் மைய தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்தது. இதில் ஆட்டோவின் முன் பகுதி சேதமடைந்தது. விபத்தில் அருண்ராஜ், சுரேஷ் காயம் அடைந்தனர். ஈரோடு அரசு மருத்துவமனை போலீசார் விசாரிக்கின்றனர்.
