ADDED : ஜூன் 23, 2025 05:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு, தண்ணீர்பந்தல்பாளையம், டி-மார்ட் அருகே கடந்த, 20ம் தேதி மாலை, பானி பூரி மற்றும் தட்டுவடை விற்கும் கடைக்காரர்கள், தகாத வார்த்தை பேசி, தாக்கி கொண்டனர். இதனால் போக்குவரத்து பாதித்தது.
வீரப்பன்சத்திரம் போலீசார் சென்று விசாரணை நடத்தினர். இதில் பானிபூரி கடை நடத்தும், ஈரோடு பெரியவலசு டி.வி.கே.வீதி சதீஷ் குமார், 33; அதே பகு-தியை சேர்ந்த தட்டு வடை கடை நடத்திய சிவக்குமார், ௫௭; தனித்தனியே புகாரளித்தனர். புகாரின் அடிப்படையில் சிவக்குமா-ருடன் இருந்த சித்தோடு செங்குந்தபுரம் பிரபுராஜா, 40; ஈரோடு, சி.எஸ்.நகர் விஜயகுமார், 44, ஆகியோரை கைது செய்தனர். சிவ-குமார், அவரது மகள் பூர்ணிமா தலைமறைவாக உள்ளனர். அதே-சமயம் சதீஷ்குமார், முத்துசாமி என இருவர் மீதும் வழக்குப்ப-திவு செய்துள்ளனர்.

