ADDED : ஜூலை 13, 2025 01:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாணியம்பாடி, வாணியம்பாடி அருகே, ஏரியில் மூழ்கி இருவர் பலியாயினர்.
திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி நேதாஜி நகரை சேர்ந்த, 6ம் வகுப்பு மாணவர் நிதிஷ், 11. இந்திரா நகரை சேர்ந்த டீக்கடை தொழிலாளி இர்பான், 20. இவர்கள் நேற்று மாலை, 4:00 மணியளவில், அருகே உள்ள லாலா ஏரியில் குளிக்க சென்றனர். அப்போது சேற்றில் சிக்கி நீரில் மூழ்கினர்.
அருகில் இருந்தவர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. வாணியம்பாடி தீயணைப்பு துறையினர் வந்து, ஏரியில் இறங்கி தேடி, இருவரது சடலத்தையும் மீட்டனர்.
வாணியம்பாடி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.