/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கல்லுாரி மாணவி உள்பட 2 பேர் தற்கொலை
/
கல்லுாரி மாணவி உள்பட 2 பேர் தற்கொலை
ADDED : ஆக 20, 2025 01:22 AM
அந்தியூர், வெள்ளித்திருப்பூர்
அருகே மொசுக்கவுண்டனுாரை சேர்ந்த தொழிலாளி சேகர் மகள் கார்த்திகா,
18; நாமக்கல் மாவட்டம் சங்ககிரியில் உள்ள தனியார் கல்லுாரி மாணவி.
நேற்று முன்தினம் இரவு கல்லுாரிக்கு செல்ல மாட்டேன் என்று கார்த்திகா
கூறியுள்ளார். இதனால் பெற்றோர் கண்டித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று காலை குளிக்க சென்ற கார்த்திகா, பாத்ரூமில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
*
வெள்ளித்திருப்பூர் அருகே கொமராயனுார், மசக்கவுண்டனுாரை சேர்ந்த
ரவிச்சந்திரன் மகன் விவேக், 29; விவசாயி. திருமணமாகாத ஏக்கத்தில்
இருந்தார். பாப்பாத்திக்காட்டுப்புதுாரில் உள்ள பாட்டி
தோட்டத்துக்கு சென்றவர், பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டார்.
ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நிலையில் நேற்று
இறந்தார். வெள்ளித்
திருப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.