ADDED : மே 31, 2026 02:46 AM
சத்தியமங்கலம்:சத்தியமங்கலத்தை
அடுத்த பழைய கொத்து காட்டை சேர்ந்தவர் திலகராஜ், 35; கட்டட தொழிலாளி.
மனைவி, இரண்டு மகள், ஒரு மகன் உள்ளனர்.
அடிக்கடி வெளியூர் சென்று தங்கி
வேலை செய்து திரும்ப வந்து விடுவார். கடந்த, 4ம் தேதி கோவைக்கு வேலைக்கு
சென்றவர், 17ம் தேதி வீட்டுக்கு கிளம்பியுள்ளார். ஆனால் வீட்டுக்கு
வரவில்லை. காணாமல் போன கணவரை கண்டு பிடித்து தரக்கோரி திலகராஜின்
மனைவி ஜோதிமணி, சத்தி போலீசில் புகாரளித்தார். இதன் அடிப்படையில்
போலீசார், திலகராஜை தேடி வருகின்றனர்.
* அத்தாணி அருகே கரட்டூரை
சேர்ந்தவர் மஞ்சான், 28; கட்டட தொழிலாளி. இவரின் மனைவி திவ்யா, 25;
திவ்யா இரண்டு மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் உள்ளார். கடந்த, 28ல்
குடியிருக்கும் வீட்டு ஓனரின் மகன் திருமணத்துக்கு, அத்தாணியில்
உள்ள மண்டபத்துக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. மஞ்சான்
புகாரின்படி ஆப்பக்கூடல் போலீசார் தேடி
வருகின்றனர்.
