ADDED : மே 26, 2026 04:26 AM
அ நிறம் | அளவு
பவானி: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே விளவுராணிப்பட்டியை சேர்ந்தவர் சபரீசன், 26; ஈச்சர் வேன் டிரைவர். சேலத்தில் இருந்து காய்கறிகளை ஏற்றிக்கொண்டு கோவைக்கு புறப்பட்டார். சித்தோடு, சமத்துவமேடு அருகே நேற்று அதிகாலை, 5:00 மணியளவில் சென்றார். அப்போது முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி மீது வேன் மோதியது. இதில் சம்பவ இடத்தில் சபரீசன் பலியானார்.
சித்தோடு போலீசார் விசாரிக்கின்றனர்.
* அந்தியூர் அருகேயுள்ள கொல்லப்பாளையத்தை சேர்ந்தவர் காவேரி, 52; கூலி தொழிலாளி. மறவன்குட்டை பஸ் நிறுத்தம் அருகே நேற்று ரோட்டை கடக்க முயன்றார். அப்போது அந்தியூரில் இருந்து வந்த கார் மோதியதில் பலத்த காயமடைந்தார். அரசு மருத்துவ
மனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
