ADDED : நவ 09, 2024 01:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாளவாடி, நவ. 9-
தாளவாடி அருகே ஜோரா ஒசூரை சேர்ந்த பால்ராஜின் மகள் ரோஸ் மீனா, 19; தனியார் கல்லுாரி மாணவி. கடந்த, 3ம் தேதி வழக்கம்போல் கல்லுாரி சென்றவர், அன்று மாலை வீடு திரும்பவில்லை. விசாரித்ததில் அன்று கல்லுாரிக்கே செல்லாதது தெரிந்தது. உறவினர்கள் வீடுகளுக்கும் செல்லாத நிலையில், தாளவாடி போலீசில் பால்ராஜ் புகாரளித்தார். இதன்படி போலீசார், மாணவியை தேடி வருகின்றனர்.
* கோபி அருகே கணேசம்புதுாரை சேர்ந்த டெய்லர் சந்துரு மனைவி ஷோபனா, 19; இருவருக்கும் மூன்று மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இந்நிலையில் மனைவி மாயமாகி விட்டதாக, கோபி போலீசில் புகாரளித்துள்ளார்.