/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கோவில் பணிக்கு போதையில் சென்ற 2 ஏட்டுகள் 'சஸ்பெண்ட்'
/
கோவில் பணிக்கு போதையில் சென்ற 2 ஏட்டுகள் 'சஸ்பெண்ட்'
கோவில் பணிக்கு போதையில் சென்ற 2 ஏட்டுகள் 'சஸ்பெண்ட்'
கோவில் பணிக்கு போதையில் சென்ற 2 ஏட்டுகள் 'சஸ்பெண்ட்'
ADDED : ஏப் 11, 2025 01:41 AM
சத்தியமங்கலம்,:கோவில் விழா பாதுகாப்பு பணிக்கு போதையில் சென்ற ஏட்டுகள் இருவர், டி.எஸ்.பி., கையை பிடித்து இழுத்து அலப்பறை செய்ததால், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.
ஈரோடு மாவட்டம், பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் விழாவிற்கான பாதுகாப்பு பணிக்கு, கருங்கல்பாளையம் ஸ்டேஷனை சேர்ந்த ஏட்டுக்கள் சுரேஷ், பிரபாகரன் அனுப்பப்பட்டனர்.
இருவரும் நள்ளிரவு, 12:00 மணிக்கு பணிக்கு வர வேண்டும். ஆனால், அதிகாலை, 3:00 மணிக்கு வாகன நிறுத்துமிடத்துக்கு காரில் வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்திய, பல்லடம் டி.எஸ்.பி., பணி விபரம் குறித்து கேட்டுள்ளார்.
இருவரும் பதில் சொல்லாமல், டி.எஸ்.பி., கையை பிடித்து காருக்குள் இழுத்துள்ளனர். உஷாரான டி.எஸ்.பி., கார் சாவியை பறித்து, இருவரும் பிடித்தார். அவர்களுக்கு அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடந்தது. இருவரையும் மதுபோதையில் இருந்தது கண்டறியப்பட்டதால், சஸ்பெண்ட் செய்து எஸ்.பி., உத்தரவிட்டார்.