ADDED : மார் 03, 2025 07:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: வெள்ளக்கோவில் அருகேயுள்ள மேட்டுப்பாளையம், பழனிகவுண்டன்வலசை சேர்ந்த விவசாயி ரமேஷ்குமார், 42; தனது தோட்டத்தில், 20 மேற்பட்ட செம்மறியாடு மற்றும் வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார்.
நேற்று காலை மேய்ச்சலுக்கு விடப்பட்டிருந் நிலையில், மூன்று நாய்கள் சேர்ந்து கொண்டு கடித்ததில் இரண்டு வெள்ளாடுகள் பலியாகின. இறந்த ஆடுகளின் மதிப்பு, 30 ஆயிரம் ரூபாய். பலியான ஆடுகளுக்கு அரசு தரப்பில் இழப்பீடு வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.