ADDED : மார் 13, 2026 04:37 AM
அ நிறம் | அளவு
காங்கேயம்: காங்கேயம் தாலுகா ஊதியூர் பகுதியில், கற்கள் மற்றும் மண், மணல் கடத்துவதாக, அடிக்கடி புகார் செல்கிறது. இந்நிலையில் திருப்பூர் புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி புவியியலாளர் வெங்கடேசன் தலைமையில் வாகன சோதனை நடத்தினர்.
இதில் வீணம்பாளையம் காடையூர் ரோடு, காட்டுப்பாளையம் பகுதியில் கிராவல் மண் கடத்தி வந்த இரு லாரியை மடக்கி பிடித்தனர். லாரியை பறிமுதல் செய்து ஊதியூர் போலீசில் ஒப்ப-டைத்தனர். லாரி உரிமையாளர், டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
