ADDED : ஜூன் 14, 2026 04:57 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:கர்நாடகா
மாநிலம் கொள்ளேகால் அஜிபுராவை சேர்ந்தவர் பிரியா, 23; சிவகிரி,
தாண்டாம்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்துக்கு
உறவினர்களுடன் பிரியா, கடந்த, 5ம் தேதி வந்தார். 11ம் தேதி இரவு வெளியே
சென்றவர் மாயமாகி விட்டார். தந்தை கோவிந்தா புகாரின்படிசிவகிரி போலீசார் தேடி வருகின்றனர்.
*
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியை சேர்ந்த குணசேகரன் மகள்
குணசேகரி, 30; இவரின் கணவர் ரகுபதி. தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள்
உள்ளனர். கணவன், மனைவி இடையே அடிக்கடி சண்டை நடந்துள்ளது. சிவகிரி
அம்மன்கோவில் தளையநல்லுார் காலனியில் வசித்தனர். கடந்த, 4ம் தேதி
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு, குணசேகரி மாயமாகி விட்டார்.
ரகுபதி புகாரின்படி சிவகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.
