ADDED : செப் 15, 2025 01:24 AM
ஈரோடு:ஈரோட்டில் இரு இளம்பெண்கள், குழந்தை, வாலிபர் மாயமானது குறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் கிழக்கு தேவகோட்டை நித்ய கல்யாணிபுரம் நாராயணன் மகள் ஸ்ரீமதி, 23; சென்னை தனியார் நிறுவன ஊழியர். கடந்த ஆக., 22ல் தன்னுடன் வேலை செய்யும் திருவண்ணாமலை அகரம்பள்ளிபட்டுவை சேர்ந்த குமாரை வீட்டுக்கு அழைத்து சென்றார். அவரை திருமணம் செய்ய இருப்பதாக தந்தையிடம் தெரிவித்துள்ளார். இன்னும் இரண்டாண்டு ஆகும். முறைப்படி வந்து பெண் கேட்குமாறும் குமாரிடம் கூறி, நாராயணன் அனுப்பி வைத்துள்ளார்.
அதேசமயம் மகளை, ஈரோடு ஜின்னா வீதியில் வசிக்கும் உறவினர் மாரியப்பன் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். அங்கிருந்து ஸ்ரீமதி மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனிடையே ஸ்ரீமதி, குமார் மொபைல்போன்கள் சுவிட்ச் ஆப் ஆகியுள்ளது. இதுகுறித்து நாராயணன் அளித்த புகாரின்படி, ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
* பவானி, சோமசுந்தரபுரத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ரவிக்குமார், 24; பிளஸ் 2 வரை படித்துள்ளார். சித்தோடு பாரத் பெட்ரோல் பங்க் ஊழியர். தனக்கு பிடித்த வாழ்க்கையை தேடி செல்வதாக வாட்ஸ் ஆப்பில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பிவிட்டு மாயமாகி விட்டார். தந்தை ராஜேந்திரன் புகாரின்படி பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
* பவானி, மேற்கு தெரு முதல் வீதியில் வசிப்பவர் செல்லதுரை, 25; இவர் மனைவி கீதாஞ்சலி, 20; இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. செல்லதுரை சித்தோடு பாரத் பெட்ரோல் பங்க் கேசியர். இந்நிலையில் குழந்தையுடன் மனைவி மாயமாகி விட்டதாக, செல்லதுரை அளித்த புகாரின்படி பவானி போலீசார் தேடி வருகின்றனர்.