ADDED : ஆக 06, 2025 12:56 AM
அ நிறம் | அளவு
ஈரோடு, டி.என்.பாளையம் அருகேயுள்ள அரக்கன்கோட்டை, வடக்கு மோதுாரை சேர்ந்தவர் இனிய பிரசாத், 21; சத்தியை சேர்ந்த, 17 வயது சிறுமியை, கடந்த ஜன., 20ல் திருமணம் செய்தார். சிறுமி நான்கு மாத கர்ப்பமாக உள்ளார். பரிசோதனைக்கு சென்றபோது தெரிய வந்தது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்தினர் புகாரின்படி, குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் போக்சோ பிரிவுகளில், இனிய பிரசாத்தை சத்தி மகளிர் போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் டி.என்.பாளையம் காமாட்சி நகரை சேர்ந்த கூலி தொழிலாளி லோகநாதன், 29; சத்தியை சேர்ந்த, 17 வயது சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்தினார். சைல்டு லைன் சார்பில் அளித்த புகாரின்படி, சத்தி அனைத்து மகளிர் போலீசார், குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் போக்சோ பிரிவில் லோகநாதனை கைது செய்தனர்.
