/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு மாவட்டத்தில் கடந்தாண்டு 2.06 லட்சம் சாலை விதிமீறல் வழக்கு
/
ஈரோடு மாவட்டத்தில் கடந்தாண்டு 2.06 லட்சம் சாலை விதிமீறல் வழக்கு
ஈரோடு மாவட்டத்தில் கடந்தாண்டு 2.06 லட்சம் சாலை விதிமீறல் வழக்கு
ஈரோடு மாவட்டத்தில் கடந்தாண்டு 2.06 லட்சம் சாலை விதிமீறல் வழக்கு
ADDED : ஜன 01, 2026 04:49 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், 2025 ஆண்டில், இரண்டு லட்சத்து, 6,830 சாலை விதி மீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஈரோடு மாவட்ட போலீசார் சார்பில் வெளியிடப்பட்டுள்ள, 2025ம் ஆண்டுக்கான அறிக்கை: சாலை விதிமீறல் தொடர்பாக, இரண்டு லட்சத்து, 6,830 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ரூ.5 கோடியே, 13 லட்சத்து, 34 ஆயிரத்து, 300 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. 10,003 பேரின் ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க போலீஸ் அக்கா திட்டம் மூலம், 2,768 விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. 48 குழந்தை திருமணம் தடுக்கப்பட்டுள்ளன. 225 போக்சோ வழக்கு பதியப்பட்டு, 20 வழக்குகளில் தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. 358 குற்றவாளிகள் மீது சரித்திர பதிவேடு துவங்கப்பட்டுள்ளது. 66 குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
185 மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 427 குற்ற வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, 702 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து, 133 வாகனங்கள், 538 பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளன. 207 லாட்டரி, 384 கஞ்சா, 599 குட்கா, 1,341 சட்ட விரோத மது விற்பனை, 48 மணல் திருட்டு, 157 சூதாட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 3,480 பேர் கைது செய்யப்பட்டனர். 464.885 கிலோ கஞ்சா, 6,041 போதை மாத்திரை, 1,904 கிலோ கஞ்சா சாக்லெட்கள், 10,688.696 கிலோ குட்கா, 28,569 மது பாட்டில்கள், 89 லிட்டர் சாராயம், 740 லிட்டர் சாராய ஊறல், 166 லிட்டர் கள், 3,466 வெளி மாநில மதுபாட்டில்கள், 67 வாகனங்கள்
பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அறிக்கையில்
தெரிவித்துள்ளனர்.

