ஈரோட்டில் கான்ட்ராக்டர் வீட்டில் 21 பவுன் திருட்டு
ஈரோட்டில் கான்ட்ராக்டர் வீட்டில் 21 பவுன் திருட்டு
ADDED : ஜூன் 17, 2026 06:08 AM
ஈரோடு:ஈரோட்டில் கான்ட்ராக்டர் வீட்டில், 21 பவுன் நகை திருடிய மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.
ஈரோடு
மாநகர் கருங்கல்பாளையம் சுப்பையன் வீதியை சேர்ந்தவர் செல்வராஜ், 68;
ஆயில் மில் பேக்கிங் கான்ட்ராக்டர். இவர் மனைவி ராதாமணி. தம்பதிக்கு
திருமணமான மகள், மகன் உள்ளனர்.
தம்பதியர் மட்டும் வசித்து
வருகின்றனர். கடந்த, 13ல் இருவரும் வெட்டுக்காட்டுவலசில் உள்ள மகன்
வீட்டிற்கு சென்று விட்டனர். 15ம் தேதி இரவு வந்தபோது வீட்டின்
முன்புற கதவின் பூட்டு மாயமாகி இருந்தது.
உள்ளே சென்று
பார்த்தபோது, வீட்டில் மறைத்து வைத்திருந்த பீரோவை சாவியை காணவில்லை.
மற்றொரு சாவி மூலம் திறந்து பார்த்தபோது பீரோவில் இருந்த, 21 பவுன் நகை
மாயமானது தெரிந்தது.
கருங்கல்பாளையம் போலீசார் விசாரணை நடத்தினர். கைவரிசை காட்டிய ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
