தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 6 நாளில் 21 அறுவை சிகிச்சை நிறைவு

6 நாளில் 21 அறுவை சிகிச்சை நிறைவு

6 நாளில் 21 அறுவை சிகிச்சை நிறைவு


ADDED : பிப் 19, 2026 04:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 19, 2026 04:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: கவுந்தப்பாடி, கால்நடை மருத்துவமனையில் சமூக நாய்களுக்-கான இனப்பெருக்க கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மையத்தை, கலெக்டர் கந்தசாமி ஆய்வு செய்தார்.

ஈரோடு மாவட்டத்தில், 20வது கால்நடை கணக்கெடுப்பின்படி, 21,770 எண்ணிக்கையில் சமூக நாய்கள் உள்ளன. இவற்றால் மனிதர்கள், கால்நடைகளுக்கான பாதிப்பு, இழப்பை தவிர்க்க, ஈரோடு மாவட்டம் பெருந்துறை, கவுந்தப்பாடி, மொடக்-குறிச்சியில், 3 கால்நடை மருத்துவ நிலையங்களில் அறுவடை சிகிச்சை வசதிகளுடன் கூடிய. விலங்கு பிறப்பு கட்டுப்பாட்டு மையம் செயல்படுகிறது.

இம்மையங்களில் கடந்த, 13 முதல் இதுவரை, 21 விலங்கு பிறப்பு கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இப்பணிகள், உள்ளாட்சி துறையினரால் சமூக நாய்கள் முறையாக பிடிக்கப்பட்டு, அவற்றுக்கான முழு உடல் பரிசோதனை செய்து, கால்நடை உதவி மருத்துவரால், அறுவை சிகிச்சை செய்யப்படுகி-றது. 5 நாட்கள் கண்காணிப்புக்கு பின், வெறிநாய்க்கடி தடுப்பூசி செலுத்தி, அவற்றை பிடித்த இடங்களில் உள்ளாட்சி துறையி-னரால் விடப்படுகிறது. கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் பாஸ்கர், துணை இயக்குனர் முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us