/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
225 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்
/
225 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்
ADDED : ஜன 16, 2026 04:29 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கடந்தாண்டு, 225 குழந்தை திரும-ணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.
இதுபற்றி ஈரோடு மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் கூறிய-தாவது:சட்டப்படி, 18 வயதுக்கு கீழ் உள்ள பெண், 21 வயதுக்கு உட்-பட்ட ஆண்களின் திருமணத்தை குழந்தை திருமணமாக கருத வேண்டும். இதை கண்டறிந்து தடுக்க, குழந்தை பாதுகாப்பு மையம், சமூக நலத்துறை, போலீஸ், உள்ளாட்சி நிர்வாகம், தொண்டு நிறுவனங்கள் என ஆறு அமைப்புகள் செயல்படுகின்-றன. இதுகுறித்து பள்ளி, கல்லுாரிகளில் விழிப்புணர்வு
ஏற்படுத்தியும், 10ம் வகுப்பு, பிளஸ் 2 முடித்து அல்லது கல்லுாரி வரும் மாணவ, மாணவியர் காதல் வயப்படுகின்றனர். பள்ளி பரு-வத்தில் திருமணம் செய்து கொள்கின்றனர். அல்லது வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்கின்றனர். இதுபற்றி அவர்களின் பெற்றோருக்கு கூட தெரிவதில்லை. அதன் பின் வரும் புகார் மீது அவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்-கிறோம். பெற்றோர் உடந்தையாக இருந்தால் அவர்கள் மீதும் வழக்கு தொடர்கிறோம்.
திருமணம் செய்து கொள்ளும் பெண், பாலியல் ஈடுபாட்டில் இருந்தது கண்டறியப்பட்டால், ஆண் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு தொடரப்படுகிறது. 18 வயது நிறைவடைந்தால் மட்டுமே திருமணம் செய்து கொள்ள வேண்டும். திருமணம் செய்யும் ஆணின் வயது, 21க்கு மேல் இருக்க வேண்டும். அவ்வாறு இல்-லாவிட்டால், ஆணின் மீது வழக்கு தொடரப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் கடந்தாண்டு மட்டும், 225 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. 240 வழக்குகள் பதிவு செய்யப்பட்-டுள்ளன. இதுபோன்ற வழக்குகளை விசாரிக்க, ஈரோடு மாவட்-டத்துக்கு சிறப்பு நீதிமன்றம் கோரி உள்ளோம். அவ்வாறு நீதி-மன்றம் அமைந்தால், அவ்வழக்குகள் துரிதமாக விசாரிக்கப்படும். இவ்வாறு கூறினர்.

