கொத்தடிமை தொழிலாளர் 24 பேர் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு
கொத்தடிமை தொழிலாளர் 24 பேர் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு
ADDED : மார் 13, 2026 04:40 AM
ஈரோடு: மொடக்குறிச்சி தாலுகா ஓலப்பாளையத்தில் ஒரு கரும்பு தோட்-டத்தில், கொத்தடிமை தொழிலாளர்களாக பணிபுரிந்த, மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த, 24 பேர் மீட்கப்பட்டனர்.
இவர்களை அழைத்து வந்த மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த புரோக்கர் சதாசிங் ஷிண்டே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் ஈரோடு ஆர்.டி.ஓ., சிந்துஜா பரிந்துரைப்படி, கலெக்டர் உத்தரவுப்படி, 24 பேரின் வங்கி கணக்கில் தலா, 30,000 ரூபாய் என, 7.20 லட்சம் ரூபாய் நிவாரணத்தொகை மாவட்ட கருவூலம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. 24 பேரும் கடந்த, 10ல் ஈரோட்டில் இருந்து ரப்திசாகர் ரயிலில் மத்திய பிர-தேசம் மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஹர்தா மாவட்ட கலெக்டர், எஸ்.பி.,யிடம் ஒப்படைக்கப்பட்டு, அங்கிருந்து சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக, வருவாய் துறையினர் தெரிவித்தனர்.
