கொத்தடிமைகளாக பணியாற்றிய ம.பி., மாநிலத்தவர் 24 பேர் மீட்பு
கொத்தடிமைகளாக பணியாற்றிய ம.பி., மாநிலத்தவர் 24 பேர் மீட்பு
ADDED : மார் 09, 2026 04:36 AM

ஈரோடு: மொடக்குறிச்சி அருகே, கரும்பு வெட்டும் வேலைக்கு அழைத்து வந்து, கொத்தடிமைகளாக நடத்தப்பட்ட, மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த, 24 பேர் நேற்று மீட்கப்பட்டனர்.
ஈரோடு மாவட்டம், ஓலப்பாளையத்தில், கரும்பு வெட்டும் பணிக்கு, மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஐந்து சிறுவர்கள், நான்கு சிறுமியர் உட்பட, 24 பேர் வரவழைக்கப்பட்டு, கொத்தடிமைகளாக நடத்தப்பட்டனர்.
அவர்களுக்கு கூலி கொடுக்காமல் மற்றும் வெளியே செல்ல முடியாதவாறு, அவர்களை தடுத்து வைத்துள்ளதாக, தேசிய பழங்குடியினர் நல ஆணையத்துக்கு புகார் சென்றது.
ஈரோடு ஆர்.டி.ஓ., செல்வராஜ் மேற்கொண்ட விசாரணையில், புகார் உறுதி செய்யப்பட்டு, 24 பேரும் மீட்கப்பட்டனர்.
இடைத்தரகராக செயல்பட்ட, மஹாராஷ்டிராவை சேர்ந்த யுவராஜ் சிண்டோ, 48, என்பவரை, கொத்தடிமை தொழிலாளர் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
