ADDED : நவ 22, 2026 06:45 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:பள்ளி
கல்வித்துறை சார்பில், தமிழக திறன் போட்டி தேர்வு நேற்று நடந்தது.
ஈரோடு கருங்கல்பாளையம் காமராஜ் மாநகராட்சி மேல் நிலை பள்ளி,
ப.செ.பார்க் மகளிர் மேல்நிலை பள்ளி, கொல்லம்பாளையம் ரயில்வே காலனி
மாநகராட்சி மேல்நிலை பள்ளி உள்ளிட்ட, 12 மையங்களில் தேர்வு நடந்தது.
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கல்லுாரி மாணவ, மாணவியர், 3,642 பேர்
தேர்வெழுத ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில், 1,145 பேர்
தேர்வெழுதினர். 2,497 பேர் எழுதவில்லை. தேர்ச்சி பெறும்
மாணவர்களுக்கு அரசு சார்பில் சான்றிதழ் வழங்கப்படும்.
