ADDED : மார் 15, 2026 07:25 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:தமிழக
பொது வினியோக திட்டத்தில், ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு அரிசி
வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இதன்-படி ஈரோடு மாவட்ட மக்களுக்கு
வினியோகிக்க, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில்,
மகாராஷ்டிரா மாநி-லத்தில் புழுங்கல் அரிசி கொள்முதல் செய்யப்பட்டது.
இதில், 2,500 டன் புழுங்கல் அரிசி, தனி சரக்கு ரயிலில் நேற்று, ஈரோடு
ரயில்வே கூட்ஸ் செட்டுக்கு வந்தது. சுமை துாக்கும் தொழி-லாளர்
நுாற்றுக்கணக்கான லாரிகளில் ஏற்றி, நுகர்பொருள் வாணிப கழக
கிடங்குகளுக்கு அனுப்பி வைத்தனர்.
